கிராமத்து கதையில் நடிக்கும் ‘லவ் டுடே‘ ரவீணா ரவி..!!

 
1

‘ ஒரு கிடாயின் கருணை மனு‘ படத்தின் மூலம் நடிகை ஆனவர் ரவீணா ரவி. அதன்பிறகு ‘காவல் துறை உங்கள் நண்பன், ராக்கி, வீரமே வாகை சூடும்‘ படங்களில் நடித்து இருந்தார். ஆனால் இந்த படம் எதுவும் அவருக்கு கைகொடுக்கவில்லை. கடைசியாக இவர் ‘லவ் டுடே‘ படத்தில் பிரதீப் ரங்கநாதனின் சகோதரியாக நடித்திருந்தார். இந்தப் படம் இவருக்கென ரசிகர்களிடம் ஒரு தனி இடத்தை பிடித்தது. இதனால் இவர் அதிகம் பேசப்படும் நடிகைகளில் ஒருவராக மாறினார். தற்போது மாமன்னன் படத்தில் நடித்து வரும் இவர் அடுத்ததாக நடிக்கும் படம் ‘வட்டார வழக்கு‘. இப்படத்தை கண்ணுச்சாமி ராமச்சந்திரன் தயாரித்து இயக்குகிறார்.

1

மேலும் இப்படத்தின் கதாநாயகனாக சந்தோஷ் நம்பிராஜன் நடிக்கிறார். இப்படத்தை பற்றி இயக்குனர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் கூறியதாவது, ‘இந்த படம் 1962 மற்றும் 1985 காலகட்டங்களில் நடக்கும் கதை. சொத்து பிரச்சினை காரணமாக பங்காளிகள் மோதிக் கொள்வதும், பின்பு கூடிக்கொள்வதுமான கதை. அன்றைய கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்யும் வகையில் படமாகி வருகிறது‘ என கூறியுள்ளார்.

From Around the web