கவனத்தை ஈர்த்த ரவி தேஜாவின் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தின் டீஸர்..!

 
1

அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரவி தேஜா நடிக்கும் புதிய படம் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’. காயத்ரி பரத்வாஜ், நூபுர் சனோன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு GV பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வம்சி இயக்கும் இப்படத்திற்கு ஆர். மதி ஒளிப்பதிவு செய்கிறார்.

பான் இந்திய முறையில் உருவாகும், இப்படம் ரவி தேஜாவின் கரியரிலேயே அதிக பட்ஜெட் கொண்ட படமாக அமைந்துள்ளது. படம் வரும் அக்டோபர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஆதாம் ஏவால் காலம் தொட்டு தெலுங்கு சினிமாவின் ஃபார்முலாவான பில்டப் ஃபார்முலாவை கன்னட கேஜிஎஃப் வேறு மாதிரி பயன்படுத்தி வெற்றி கண்டது. அப்படியான அதே பில்டப்பை மீண்டும் தெலுங்கு சினிமா கையிலெடுத்திருப்பதை டீசர் உறுதி செய்கிறது.

From Around the web