ஓபனாக பேசிய ரவீந்தர்... சௌந்தர்யாவை பிக் பாஸ் டீம் ஏமாற்றிட்டாங்க..!

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு மாதம் காலம் ஆகிவிட்டாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் நடந்த பல நிகழ்வுகள் குறித்து பேட்டிகளில் பேசிக்கொண்டு வருகிறார்கள்.
அதுபோல youtube சேனல்களிலும் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த விஷயங்களை வெளிப்படையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் ரவீந்தர், சௌந்தர்யா பற்றி பேசியது இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது.
அதில் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் நடந்தது. அதிலும் சௌந்தர்யாவிற்கு ஏமாற்றம் நடந்து விட்டது என்று தான் சொல்வேன். அதாவது ஒவ்வொரு சீசனிலும் ரன்னராக வருபவருக்கு வீடு, கார், பணம் என்று ஏதாவது கொடுப்பார்கள். ஆனால் இந்த சீசனில் சௌந்தர்யாவிற்கு எதுவுமே கொடுக்கவில்லை. அதுபோல மற்ற சீசன்களில் கிராண்ட் பினாலே பிரமாண்டமாக ஏற்பாடு செய்வார்கள். ஆனால் இந்த சீசனில் பினாலேவிற்க்கு கூட பெருசாக எந்த விஷயமும் செய்யவில்லை.
ஒவ்வொரு வார இறுதியும் எப்படி இருக்குமோ அது போல் பினாலேவிற்கு ஏற்பாடுகள் செய்திருந்தது. பிக் பாஸ் டீமுக்கு இந்த சீசன் மீது என்ன கோபம் என்று தெரியவில்லை. ஓரவஞ்சனை தான் காட்டி இருந்தார்கள். இதற்கு முன்பு பணப்பெட்டி டாஸ்க் வைத்து அதில் பல்க்கான தொகை வைப்பார்கள் ஆனால் இந்த முறை டைட்டில் வின்னருக்கு கொடுக்க வேண்டிய பணத்தில் இருந்து தான் பணப்பெட்டி டாஸ்க் நடத்தப்பட்டிருந்தது என்று அந்த பேட்டியில் ரவீந்தர் பேசி இருக்கிறார்.
யார் பிக் பாஸ் வீட்டில் தொடர வேண்டும் யார் வெளியே போக வேண்டும் என்று முடிவெடுப்பது பிக் பாஸ் டீம் தான் என்றும் ரவீந்தர் கூறியிருக்கிறார். அதோடு அதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் தீபாவளி வாரத்தில் எவிக்ஷனுக்கான நாமினேஷன் நடைபெற்றது.
அதுபோல அந்த வாரத்தில் மக்களும் தங்களுக்கு பிடித்தவர்களை சேவ் செய்ய வேண்டும், பிடிக்காதவர்கள் வெளியே போக வைக்க வேண்டும் என்று வாக்குகள் செலுத்தி இருந்தார்கள். ஆனால் கடைசியில் என்ன நடந்தது...? இந்த வாரம் தீபாவளி வாரம் அதனால் நோ எவிக்ஷன் என்று அறிவித்துவிட்டார்கள். தீபாவளி வாரம் என்பது அவர்களுக்கு வார இறுதியில் தான் தெரியுமா? அதற்கு முன்பு தெரியாதா? எதற்காக மக்களை இப்படி ஏமாற்ற வேண்டும் என்றும் அந்த பேட்டியில் ரவீந்தர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.