‘ராயன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
‘ராயன்’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை தனுஷ் தனது சமூக வலை தளத்தில் அறிவித்துள்ளார்.
தனுஷ் நடித்து இயக்கிய திரைப்படம் ‘ராயன்’ அவருடைய ஐம்பதாவது படம் என்பதால் அவருக்கு ஸ்பெஷல் ஆனது என்பது தெரிந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தை ஜூன் 12-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் ’மகாராஜா’ திரைப்படம் ஜூன் 14ஆம் தேதி வெளிவருவதால் அவருக்காக தனுஷ் விட்டுக் கொடுத்ததாகவும் கூறப்பட்டது.
இதனை அடுத்து ‘ராயன்’ திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது ஜூலை 26 ஆம் தேதி ‘ராயன்’ திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் என்பதை அடுத்து தனுசு ரசிகர்களுக்கு இந்த படம் மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Raayan From July 26th pic.twitter.com/2UaNocSTm3
— Dhanush (@dhanushkraja) June 10, 2024