நிர்வாணமாக கூட நடிக்க தயார் : நடிகை பேச்சால் பரபரப்பு..! 

 
1

பிரபல மலையாள நடிகையான ஸ்வேதா மேனன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்பட பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களை நடித்துள்ளார். இவர் தமிழில் ஜோதிகா நடித்த ’சிநேகிதியே’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிம் அதன் பின்னர் ’சந்தித்த வேளை’, ’சாதுமிரண்டால்’, ’நான் அவன் இல்லை 2’, ’அரவான்’, ’துணை முதல்வர்’, ’இணையதளம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  இவர் ஏராளமான மலையாள படங்களில் கிளுகிளுப்பாக நடித்துள்ளார்

இந்த நிலையில் நடிகை ஸ்வேதா மேனன் சமீபத்தில் பேட்டி அளித்த போது  பிகினி உடையில் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு என்னுடைய கதாபாத்திரத்தில் தேவை என்ன என்பதை அறிந்து தான் நான் நடிப்பேன், அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, பிகினி உடையில் நடிக்க வேண்டும் என்றாலும் நான் நடிப்பேன், கதை அம்சத்திற்கு தேவைப்பட்டால் நிர்வாணமாகவும் நான் நடிக்க தயார் என்று கூறியுள்ளார், அவரது இந்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகை ஸ்வேதா மேனன் முதலில் பாலிவுட் மாடல் ஒருவரை திருமணம் செய்து அதன் பின் அவரை விவாகரத்து செய்து விட்டார். இதனை அடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு ஸ்ரீனிவாசன் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர், தான் நடிக்கும் ஒரு திரைப்படத்திற்காக தன்னுடைய பிரசவத்தை டெலிவரி செய்யும் காட்சியை படமாக்க அனுமதி அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From Around the web