”ரோபோ சங்கர் உடல் மெலிந்த காரணம் இதுதான்” மனைவி பிரியங்கா பதில்..!!

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் திடீரென உடல் எடை குறைந்து தோற்றமளிப்பது குறித்து அவருடைய மனைவியும் நடிகையுமான ப்ரியங்கா விளக்கம் அளித்துள்ளார்.
 
robo shankar

தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான காமெடி ஷோ மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர். இவர் படையப்பா படத்தில் துணை நடிகராக வந்து போயிருப்பார். எனினும், எண்ணற்ற மேடை நிகழ்ச்சிகள், மிம்கிரி ஷோ மூலம் பெரியளவில் பிரபலமானார்.

அதன்மூலம் அவருக்கு தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. அதையடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘மாரி’ போன்ற படங்களில் நடித்து கவனமீர்த்தார்.

தொடர்ந்து விஸ்வாசம், வேலைக்காரன், இரவின் நிழல், மாயா போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் நடிகர் ரோபோ சங்கர் உடல் மெலிந்து, ஆளே அடையாளம் தெரியாதது போல இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின.

இது இணையத்தில் பெரும் வைரலானது. புகைப்படங்களை பார்க்கும் பலரும் ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சு? , அவருக்கு உடல்நிலை சரியில்லையா?  வேண்டுமென்றே உடல் குறைத்துவிட்டாரா என்று பல்வேறு கேள்விகள் எழுப்பினர். பல்வேறு சமூகவலைதளங்களிலும் அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

robo shankar

தற்போது ரோபோ சங்கரின் உடல்நிலை குறித்து அவருடைய மனைவி பிரியங்கா தகவல் வெளியிட்டுள்ளார். அதன்படி அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்துக்காக அவர் உடல் எடையை குறைத்துள்ளார். அவருக்கு உடல்நிலையில் எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. ரோபோ சங்கர் நலமாக உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

ப்ரியங்கா ரோபோ சங்கரின் பதில் ரசிகர்களை நிம்மதி அடையச் செய்துள்ளது. ரோபோ சங்கர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே ப்ரியங்கா நடிகையாக இருந்தார். தில், கண்ணாத்தாள் போன்ற படங்களில் காமெடி காட்சிகளில் அவர் நடித்திருப்பார். 

அதேபோன்று ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவும் ஒரு நடிகை தான். பிகில், விருமன் போன்ற படங்களில் வலுவான குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்தும் வருகிறார்.


 

From Around the web