சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய வீடியோவை பார்த்து நான் அழுதுட்டேன்: இந்து ரெபக்கா வர்கீஸ்..!

 
1

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜனின் கதை தான் அமரன் படத்தின் கதை. அமரன் படம் பார்க்கும் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.சிவகார்த்திகேயனின் கெரியரில் அதிவேகத்தில் ரூ. 100 கோடி வசூல் செய்த படமாக ஆகிவிட்டது அமரன். 

இந்நிலையில் அமரன் படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடைசி காட்சியில் அழுகையை அடக்க முடியவில்லை என்று கூறியது வைரலானது.

இந்நிலையில் அந்த வீடியோவை மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரெபக்கா வர்கீஸும் பார்த்திருக்கிறார். ரஜினி பேசியதை கேட்டு இந்து அழுதுவிட்டாராம்.

ராஜ்குமார் பெரியசாமியிடம் இந்து கூறியதாவது,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகன் முகுந்த். ரஜினி சாரின் பாராட்டு வீடியோவை பார்த்து அவர் நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பார். ரஜினி சார் பாராட்டி பேசியதை கேட்டு எனக்கு கண்ணீர் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.


 

From Around the web