ரெபெல் ஸ்டார் பிரபாஸ்க்கு விரைவில் திருமணம்! பொண்ணு யார் தெரியுமா..?

 
1

பிரபாஸ்  திருமணம் குறித்து அவ்வப்போது சில வதந்திகள் பரவி கொண்டுதான் வருகின்றன. இந்நிலையில், நடிகர் ராம் சரண் பிரபாஷின் திருமணம் பற்றி  சமீபத்தில் பேசியுள்ளார். நடிகர் ராம்சரண், 'கேம் சேஞ்ஜர்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடிகர் பாலகிருஷ்ணா நடத்தம் "அன்ஸ்டாப்பிள்' என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் பாலகிருஷ்ணா பிரபாஸின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அப்போது அதற்கு பதிலளித்த ராம்சரண், "பிரபாஸின் மனைவி ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி நகருக்கு அருகிலுள்ள கானபவரம் என்கிற ஊரைச் சேர்ந்தவராக இருக்கலாம்" என்று கூறினார். இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. இதனையடுத்து விரைவில் பிரபாஸின் திருமணத்திற்கான அறிவிப்பு வெளியானாலும் ஆகலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள். 

From Around the web