இலியானாவை தூக்கி தூரப்போட்ட ரெட் கார்டு..!

 
இலியானா

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவருடன் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக தெலுங்கு சினிமாவில் இழந்த மார்கெட்டை மீட்க முடியாமல் நடிகை இலியான போராடி வருகிறார்.

தெலுங்கு சினிமாவில் பத்து வருடங்களுக்கு முன்பு வரை நம்பர் ஒன் நடிகையாக இருந்தவர் இலியானா. பாலிவுட்டில் இவர் அறிமுகமான பர்ஃபி படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இந்தி சினிமாவில் முகாமிட துவங்கினார். இதனால் தெலுங்கு சினிமாவை கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிவிட்டார்.

ஆனால் பாலிவுட் திரையுலகம் இலியானாவை கண்டுக்கொள்ளவில்லை. இதனால் சுவரில் அடித்த பந்து போல மீண்டும் தெலுங்கு சினிமாவுக்கே அவர் திரும்பிவிட்டார். ஆனால் இம்முறை தெலுங்கு சினிமாவுக்கு அவர் தேவைப்படவில்லை.

பெரியளவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதற்கு பின்னால் ஒரு காரணம் உள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளருக்கு படம் நடித்து தருவதாக அட்வான்ஸ் வாங்கிவிட்டு, அதை இலியானா திருப்பி தராமல் இருந்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்களிடம் அவர் புகார் அளித்துள்ளார். இதனால் இலியானாவுக்கு தெலுங்கு திரைப்பட உலகில் மறைமுக ரெட்கார்டு போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே இலியானாவின் சில நடவடிக்கைகள் தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. தற்போது இந்த விவகாரத்தை பயன்படுத்திக் கொண்டு தயாரிப்பாளர்கள் இலியானாவை கண்டுக்கொள்ளாமல் இருந்துவிட்டனர்.
 

From Around the web