மீண்டும் ஒரு புதிய சீரியலில் களமிறங்கும் செம்பருத்தி ஷபானா..!!

 
1

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘செம்பருத்தி’ சீரியல் மூலம் ரசிகர்களின் அன்பை பெற்றவர் ஷபானா ஷாஜஹான்.அந்த சீரியலில் பார்வதி என்ற கிராமத்து பெண்ணாக வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

பல அதிரடி திருப்பங்களுடன் சென்றுக் கொண்டிருந்த இந்த சீரியல் கடந்த ஆண்டு நிறைவுபெற்றது. இதையடுத்து எப்போது மீண்டும் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புதிய சீரியல் ஒன்றின் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர வந்துள்ளார். 

MrManaivi

சன் டிவியில் விரைவில் ஒளிப்பரப்பாக உள்ள ‘மிஸ்டர் மனைவி’ என்ற சீரியலில் ஷபானா ஷாஜஹான் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியலில் தெலுங்கானாவை சேர்ந்த பவன் ரவீந்திரா கதாநாயகனாக நடிக்கிறார். மாறுபட்ட குணம் கொண்ட இரு இதயங்கள் காதலில் இணைவதுதான் இந்த சீரியல். விரைவில் இந்த சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 


 

From Around the web