ராயன் பட பாடலுக்கு ரீல்ஸ்... வெங்கடேஷ் பட் வீடியோவிற்கு குவியும் லைக்ஸ்..!
Jul 29, 2024, 07:05 IST

இந்தியாவில் மிகவும் பிரபலமான சமையல்காரர் ஆக திகழும் வெங்கடேஷ் பட். இவர் Asan Memorial இல் கேட்டரிங் படித்தார். மேலும் கார்னெல் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார்.
இதை தொடர்ந்து சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகம் படித்து முடித்து முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளார்.
இவர், ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி மேலும் பிரபலமடைந்தார்.இதை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கிட்டதட்ட நான்கு சீசங்கள் வரை அதில் நடுவராக கலக்கி வந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் குக்கு.. டூப் குக்கு நிகழ்ச்சியில் நடுவராக திகழ்ந்து வருகின்றார்.
இந்த நிலையில் தற்போது செஃப் வெங்கடேஷ் பட் தனுஷ் நடித்த ராயன் பட பாடலுக்கு ரீல்ஸ் ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார். தற்பொழுது குறித்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.