பாலிவுட்டில் விஜய் சேதுபதிக்கு ஜோடியான ரெஜினா கசாண்ட்ரா..!

 
ரெஜினா கசாண்ட்ரா

தமிழில் தயாராகியுள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ள பிரபல நடிகை, பாலிவுட்டில் தயாராகும் வலை தொடர் ஒன்றிலும் அவருக்கு ஜோடியாக நடிக்கும் விபரம் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி தற்போது 7 படங்களில் நடித்து வருகிறார். மேலும் 5 படங்களில் நடித்து வருகிறார். இதுபோ சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியையையும் வாரந்தோறும் தொகுத்து வழங்கி வருகிறார். இதனுடன் ராஜ் மற்றும் டீகே தயாரிக்கும் ஒரு வலை தொடரிலும் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் கதாநாயகனாக ஷாஹித் கபூர் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இந்த வலைதொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார், அவருக்கு ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இவர் ’முகிழ்’ என்கிற பெயரில் தயாராகி வரும் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்துள்ளார். இந்த படம் மூலம் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா சேதுபதி சினிமாவில் கால்பதிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web