நடிகர் விவேக் அஸ்திக்கு உறவினர்கள் செய்த உரிய மரியாதை..!

 
நடிகர் விவேக் அஸ்திக்கு உறவினர்கள் செய்த உரிய மரியாதை..!

மறைந்த நடிகர் விவேக்கின் அஸ்திக்கு அவருடைய சொந்த ஊரில் உறவினர்கள் உரிய மரியாதையை வழங்கியுள்ளது இயற்கை ஆர்வலர்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த விவேக் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த நாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய திடீர் மறைவு திரையுலகத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களையும் மிகவும் கவலையடைச் செய்தது.

அதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 17-ம் தேதி விருகம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட விவேக்கின் உடல், அன்றே இறுதி மரியாதையுடம் மின் மாயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவருடைய அஸ்தியை பெற்றுக்கொண்ட உறவினர்கள் நடிகர் விவேக்கின் சொந்த ஊருக்கு அதை எடுத்துச் சென்றனர்.

மதுரை அருகேவுள்ள பெருங்கோட்டூர் கிராமம் தான் விவேக்கின் மூதாதையர்களின் சொந்த ஊராகும். அங்குள்ள சுடுகாட்டில் விவேக்கின் அஸ்தியை ஒரு மரத்துடன் புதைத்து உறவினர்கள் இறுதி மரியாதை செய்துள்ளனர். தன்னுடைய வாழ்நாளில் ஒரு கோடி மரக் கன்றுகளை நட்டுவிட வேண்டும் என்பது விவேக்கின் பெருங்கனவாக இருந்தது.

அந்த பாதையில் 33 லட்சம் மரக்கன்றுகளை அவர் நட்டுவைத்துவிட்டார். அதற்கு மரியாதை செய்யும் விதமாக  ஒரு மரக்கன்றுக்கு உரமாக அவருடைய அஸ்தி மாறியுள்ளது. இயற்கை ஆர்வலராக இருந்த விவேக்கிற்கு இதுதான் உரிய அஞ்சலியாக இருக்கும் என அவர்களுடைய குடும்பத்தார் எண்ணுகின்றனர். 
 

From Around the web