ஜேம்ஸ் பாண்டு 25-வது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 
நோ டைம் டூ டை
டேனியல் கிரைக் நடிப்பில் உருவாகியுள்ள புதிய ஜேம்ஸ் பாண்டு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரங்களை பார்க்கலாம்.

உலகளவில் எப்போதும் வெற்றிநடை போடும் ‘ஃப்லிம் ஃபிரான்சைஸ்’ (திரைப்பட வரிசை) என்றால் அது ஜேம்ஸ்பாண்டு தான். இங்கிலாந்து உளவுத்துறை நடவடிக்கைகளை குறித்து உருவாக்கப்படும் இப்படத்துக்கு  உலகளவில் பல ரசிகர்கள் உள்ளனர்.

அதில் இடம்பெறும் ஜேம்ஸ்பாண்டு என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் ஹாலிவுட்டில் செல்வாக்கு பெற்றவர்களாக கருதப்படுவார்கள். தற்போதைய ஜேம்ஸ்பாண்டாக இருக்கும் டேனியல் கிரைக்கும் செல்வாக்கு மிக்க நடிகராக உள்ளார்.

இவருடைய நடிப்பில் புதிய ஜேம்ஸ்பாண்ட் படமாக தயாராகியுள்ளது ‘நோ டைம் டூ டை’. இது ஜேம்ஸ்பாண்டு வரிசைப் படங்களில் 25-வது படமாக வெளியாகிறது. கொரோனா பரவல் காரணமாக இப்படத்தின் வெளியீடு தாமதமாகி வந்தது.

தற்போது நிலைமை சீரடைந்து வருவதையொட்டி படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த வரும் 30-ம் தேதி இப்படம் உலகளவில் வெளியாகிறது. இது ஜேம்ஸ்பாண்டு ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

‘நோ டைம் டூ டை’ படத்துடன்  ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் இருந்து டேனியல் கிரைக் விடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை அவருடைய நடிப்பில் 5 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒன்று குறும்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

From Around the web