நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ‘நாரப்பா’- ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 
நாரப்பா படக்குழு

தெலுங்கில் வெங்கடேஷ் டகுபாத்தி நடிப்பில் தயாராகியுள்ள “நாரப்பா” படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் , மஞ்சு வாரியார், நரேன், பசுபதி, கென் ஆகியோருடைய நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‘அசுரன்’. இந்த படத்தில் நடித்தற்காக இரண்டாவது முறையாக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் தற்போது தெலுங்கில் ‘நாரப்பா’ என்கிற பெயரில் தயாராகியுள்ளது. வெங்கடேஷ் டகுபாத்தி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ப்ரியாமணி நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் அட்டலா என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கொரோனா காரணமாக இந்த படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதமாகிக் கொண்டே வந்தது. ஆனாலும் இப்படம் திரையரங்குகளில் தான் வெளியாக வேண்டும் என்கிற கொள்கையுடன் இருந்தார் வெங்கடேஷ். எனினும் இப்போதுவரை திரையரங்குகள் திறப்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை.

இதனால் ‘நாரப்பா’ படம் வரும் 20-ம் தேதி அமேசான் பிரைம் இணையதளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து வெங்கடேஷ் நடித்துள்ள த்ரிஷ்யம் 2 படத்தின் தெலுங்கு ரீமேக் படமும் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web