ரஜினியின் அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 
அண்ணாத்த திரைப்படம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. எந்திரன் படத்துக்கு பிறகு ஒரு கமர்ஷியல் ஹிட்டுக்காக ஏங்கி வரும் ரஜினிக்கு இப்படம் சரியான தீனி போடும் என்று சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் நயன்தாரா இந்த படத்தில் ஒரு கவுரவ தோற்றத்தில் வந்து போகிறார். கொரோனா பரவலுக்கு இடையிலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.


இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உடல்நல பாதிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி அண்ணாத்த திரைப்படம் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் பலரும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

From Around the web