புதிய ஜேம்ஸ் பாண்டு 25-வது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 
ஜேம்ஸ் பாண்டு

ஜேம்ஸ் பாண்டு வரிசையில் தயாராகியுள்ள புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது  உலக ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 24 ஜேம்ஸ்பாண்டு படங்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக வெளியான ஜேம்ஸ்பாண்டு படம் ஸ்பெக்டர். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இந்த படம் மாபெரும் வெற்றிப் பெற்றது.

தற்போது இந்த வரிசையில் உருவாகியுள்ள 25-வது படம் தான் ‘‘நோ டைம் டூ டை’. முந்தைய படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்த டேனியல் கிரைய்க் தான் இந்த படத்திலும் நடித்துள்ளார். பிரம்மாண்டமாக தயாராகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்பு உள்ளது. 250 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று கூறப்படுகிறது.

கொரோனா தொற்றால் இந்த படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போனது. இந்நிலையில் வரும் செப்டம்பர்  28-ம் தேதி உலகம் முழுவதும் இந்த படம் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

From Around the web