அவதார் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி..!

 
அவதார் 2

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் ‘அவதார்’ அடுத்த பாகத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விபரங்களை விரிவாக பார்க்கலாம்.

டைட்டானிக் படத்தை தொடர்ந்து ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் உருவான படம் அவதார். கடந்த 2009-ம் ஆண்டு வெளியான இந்த படம் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொழில்நுட்ப ரீதியாகவும், திரைப்பட உருவாக்கத்திற்கும் இப்படம் புதிய பாணியை உருவாக்கியது.

இந்த படத்துக்கு கிடைத்த பிரமாண்ட வெற்றியை அடுத்து அவதார் 2-ம் பாகத்துக்கான பணிகள் துவங்கின. இதனுடைய படப்பிடிப்பு பணிகள் நியூசால்ந்தில் நடைபெற்றது. ஆனால் அதற்குள் கொரோனா பிரச்னை தாண்டவமாட ஷூட்டிங் பணிகள் தாமதமாகின.

கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து மீண்டும் படப்பிடிப்பு துவங்கப்பட்டு இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. உலகளவிலான ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவதார் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 2022-ம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாக்கப்பட்டு வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

From Around the web