2027ல் ரிலீஸ்... 1000 கோடி பட்ஜெட்.. 600 நாட்கள் படப்பிடிப்பு..!
’ராமாயணம்’ திரைப்படம் பாலிவுட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது என்பதும் இந்த படம் ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் உள்பட கிட்டத்தட்ட 30 மொழிகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் ராமர் கேரக்டரில் ரன்பீர் கபூர், ராவணன் கேரக்டரில் யாஷ், சீதை கேரக்டரில் சாய் பல்லவி நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தை மது மந்தனா அல்லு அரவிந்த் இணைந்து தயாரிக்கின்றனர்.
‘தங்கல்’ உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் ஏஆர் ரகுமான் மற்றும் பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்திய சினிமாவை உலக அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் இந்த படம் 2027ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.