லாரி லாரியாக செல்லும் நிவாரண பொருட்கள்! வெள்ள நிவாரண பணிகளை தொடங்கிய ரஜினி..!

 
1

மிக்ஜாம் ஏற்படுத்திய பெரு வெள்ளத்தினால் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு மக்கள் உணவு, உடை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மற்றவர்களின் உதவியை நாடி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் கார்த்தி, சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிவாரணத் தொகைகளையும் அனுப்பி மக்களுக்கு உதவுகின்றனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அதே சமயம் நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் சமீபத்தில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் தனது 73 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு தன்னுடைய அறக்கட்டளையின் மூலம் இருவதற்கும் மேற்பட்ட நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். அரிசி, கோதுமை, ரவை, எண்ணெய், பாய் பெட்ஷீட் போன்ற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கொண்ட நிவாரணப் பொருட்கள் ராகவேந்திரா மண்டபத்திலிருந்து ரஜினிகாந்தின் ரசிகர்கள் மன்றத்தின் சார்பில் லாரி, டெம்போக்களின் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.வெள்ள நிவாரண பணிகளை தொடங்கிய ரஜினி..... லாரி லாரியாக செல்லும் நிவாரண பொருட்கள்!

கிட்டத்தட்ட 15 வாகனங்களுக்கும் மேல் இந்த நிவாரண பொருட்கள் அனைத்தும் அனுப்பி வைக்கப்படுவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

From Around the web