ஓ மரியா பாடலில் ஆடிய நடிகர் டேனியை நினைவிருக்கா?

காதலர் தினம் திரைப்படத்தில் "ஓ மரியா ஓ மரியா இமெயிலில் லவ் லெட்டர் தரியா, கடலுக்கு பிஸ்ஸிங் நெட்டு, காதலுக்கு இன்டர்நெட்டு" என்ற பாடல் இடம்பெற்றிருந்து.
இந்த பாடலில் குடுமி வைத்துக் கொண்டு நடனமாடியவர்தான் டேனி. இவர் மின்னலே, டும் டும் டும் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அக்யூஸுடு எனும் திரைப்படத்தில் காவல் உதவி ஆய்வாளராக நடித்து வருகிறார். இவர் தற்போது தேவாலயத்தின் பாஸ்டராக இருந்து வருகிறாராம். இவர் கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என் கல்யாணத்திற்கு 40 பேர்தான் வந்தார்கள். என் மனைவியின் அம்மா வந்தாங்க, அப்பா வரவில்லை. எனக்கு என் மனைவியை பார்த்ததும் பிடித்துவிட்டது. நான் அவரை பிரபோஸ் செய்த போது அவரும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் அவருடைய வீட்டில் ஒப்புக் கொள்ளவில்லை.
என் மனைவிக்கு துபாயில் இருந்து மாப்பிள்ளை பார்த்தார்கள். ஆனால் அவர் ஸ்ட்ராங்காக இருந்து என்னை திருமணம் செய்து கொண்டார் என்றார். மேலும் இவருடைய வீடு முழுக்க பூக்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து கேட்ட போது தனது மூத்த மகன் இவற்றை தன் கையாலேயே செய்து அலங்கரித்தான். அதனால் கிறிஸ்துமஸ் முடிந்தாலும் இதை எடுக்க மனமில்லை. அதனால் அப்படியே விட்டுவிட்டோம். மேலும் கிறிஸ்துமஸுக்கு முன்பே மகனுக்கு விபத்து நடந்து முகத்தில் 5 பிளேட் வைத்திருந்தார்கள். அவர் குணமாகி தற்போது கல்லூரிக்கு செல்கிறார். அவரது உழைப்பிற்காக இந்த அலங்காரங்களை அப்படியே வைத்திருக்கிறோம் என்றார் . மேலும் டேனி 8.5 லட்சத்திற்கு வாட்ச் வைத்திருந்தார். அத்துடன் ஒவ்வொரு கோட்டும் ரூ 60 ஆயிரம், ரூ 70 ஆயிரம் என சொன்னார்.
மேலும் கமல்ஹாசன், சிம்ரன் பயன்படுத்தும் பெர்ஃபியூமை டேனியும் வைத்துள்ளார். அதன் விலை ரூ 7 ஆயிரமாம். ஜோடி ஆர் யூ ரெடி என்ற நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டாராம். அவரை பார்த்த ரம்பா ஆச்சரியப்பட்டாராம். காதலர் தினம் படத்தில் ஹீரோவாக நடித்த குணாலை பெங்களூரில் சாலையில் வைத்து டேனி பார்த்துவிட்டு, இயக்குநரிடம் காட்டியுள்ளார். இயக்குநரும் குணாலின் முடியை பார்த்து ஓகே சொல்லிவிட்டாராம். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பாஸ்டராக இருந்து வருகிறாராம். கொரோனா நேரத்தில் சர்ச்செல்லாம் பெங்களூரில் மூடிவிட்டன. இதனால் டேனியை ஆன்லைனில் சர்ச் தொடங்க சொல்லி ஏசு குறித்து பேச சொன்னார்கள். நானும் முதலில் தயங்கிவிட்டு பிறகு குடிப்பது, சிகரெட் பிடிப்பதை விட்டுவிட்டு தொடங்கியதாக தெரிவித்தார்.