விரைவில் தயாராகும் ரேனிகுண்டா- 2..!
 

 
ரேனிகுண்டா

கடந்த 2019-ம் ஆண்டு ஆர். பன்னீர்செல்வம் இயக்கத்தில் ஜானி மற்றும் சனுஷா என்கிற அறிமுக நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் ரேனிகுண்டா. தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு தயாராகவுள்ளது.

இந்த படத்தை நிக் ஆர்டஸ் சக்கரவர்த்தி தயாரித்தார். இதில் அவருடைய மகன் ஜானி கதாநாயகனாக அறிமுகமானார். மேலும் தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த சனுஷாவுக்கும் இதுதான் முதல் படம்.

மேலும் மறைந்த நடிகர் தீப்பெட்டி கணேசன், சஞ்சனா சிங் உள்ளிட்ட பலர் இந்த படம் மூலமே தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகினர். இந்த படத்தை தொடர்ந்து கருப்பன், 18 வயசு, நான்தான் சிவா உள்ளிட்ட படங்களை இயக்கினார் ஆர். பன்னீர்செல்வம்.

ஆனால் அது எதுவும் பெரியளவில் வெற்றிப் பெறவில்லை. இதனால் ரேனிகுண்டா படம் மூலமாகவே அவர் அறியப்பட்டார். தற்போது தென்னிந்திய சினிமாக்களில் இரண்டாவது பாகம் படங்களுக்கு நல்ல வரவேற்பு குவிந்து வருகிறது.

இதன்காரணமாக ‘ரேனிகுண்டா’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்தையும் ஆர். பன்னீர்செல்வம் இயக்கவுள்ளார். சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது கிடைத்துள்ள முதற்கட்ட தகவலின்படி தீப்ஷிகா கதாநாயகியாக நடிப்பது தெரியவந்துள்ளது.

From Around the web