ஒரே மாப்பிள்ளையை இரண்டு முறை திருமணம் செய்த ரேஷ்மா..!!
 

சீரியல் நடிகர் மதனை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை ரேஷ்மா, அவரையே மறுமுறை திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 
reshma

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் ரேஷ்மா. அதில் அவர் மிகவும் பிரபலமடைந்ததை அடுத்து, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பூவே பூச்சுடவா’ தொடரில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 

அந்த சீரியலில் தன்னுடன் நடித்த மதன் என்பவருடன் ரேஷ்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மாறியதை அடுத்து, பெற்றோர் சம்மத்துடன் 2021-ம் ஆண்டில் அவரை கரம்பிடித்தார். இந்த ஜோடி திருமணமானதை தொடர்ந்து விஜய் டிவி-க்கு வந்துவிட்டனர். 

அதில் ஒளிபரப்பான ‘மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சியில் பங்கெடுத்து மேலும் பிரபலமாகினர். இதன்மூலம் ரேஷ்மாவுக்கு ராடன் நிறுவனம் தயாரிக்கும் ‘கிழக்கு வாசல்’ தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விரைவில் இந்த தொடர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. 

reshma muralidharan

இதற்கான ப்ரோமோ சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் அது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. அதன்படி கிழக்குவாசல் தொடர் வரும் ஜூன் மாதம் முதல் தனது ஒளிபரப்பை துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே மதனை தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்ட ரேஷ்மா, மீண்டும் அவரை கேரள முறைபடி திருமணம் செய்துள்ளார். குருவாயூர் கோயிலில் மதனுக்கு ரேஷ்மா துளசி மாலை அணிவித்து கேரள பாரம்பரியத்தில் திருமணம் செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. 
 

From Around the web