ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்டுள்ள வொர்க்கவுட் வீடியோ..! 

 
1

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் சூரிக்கு ஜோடியாக ரேஷ்மா பசுபுலேட்டி நடித்திருப்பார். நடிகர் விமலின் விலங்கு வெப்சீரிஸில் கிச்சாவின் மனைவியாக நடித்தும் தனது நடிப்பால் ரசிகர்களை திகிலடைய செய்திருந்தார் ரேஷ்மா பசுபுலேட்டி. சினிமா, சீரியல் என நடித்து அசத்தி வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி போல்டாக பல போட்டோஷூட்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும், வெளிப்படையாக அந்தரங்கம் அன்லிமிடெட் எனும் பாட் காஸ்ட் நிகழ்ச்சியில் அவர் பல விஷயங்களை பேசி பகீர் கிளப்பினார். மேலும், விவாத நிகழ்ச்சியில் சுச்சி லீக்ஸ் சமயத்தில் தனது ஆபாச மார்பிங் வீடியோ பரவியது என்றும் பேசியிருந்தார்.

பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா பசுபுலேட்டிக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. இடுப்போரம் உள்ள பெரிய டாட்டூவை எல்லாம் காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து வந்த ரேஷ்மா பசுபுலேட்டி மேக்கப் இல்லாத போட்டோக்களையும் கூட வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வருவார்.

இந்நிலையில், வேகமாக வொர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்டுள்ளார். பப்ளி நடிகைகளான ஹன்சிகா, லாஸ்லியா, ஷிவானி நாராயணன், ஜோதிகா உள்ளிட்ட பலர் வொர்க்கவுட் செய்து ஸ்லிம்மாகி வரும் நிலையில், ரேஷ்மா பசுபுலேட்டியும் ஒல்லியாகிட்டா என்ன பண்றது என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

From Around the web