நெல்சனை கலாய்த்த ரெடின் கிங்ஸ்லி.. கையெடுத்து கும்பிட்ட நெல்சன்..!

 
1

ஜெயிலர் படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்திற்கு பக்க பலமாக இருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் படத்தை மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆக்கிய ரசிகர்கள் என அனைவருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஜெயிலர் படம் ரிலீஸ் ஆவதற்கு முந்தைய நாளில் இமய மலைக்கு கிளம்பிச் சென்ற ரஜினிகாந்த் கடந்த ஒரு வாரமாக ஜெயிலர் படக்குழுவினரே சந்தோஷத்தில் திளைத்து வரும் நிலையில், பாபா குகையில் தியானம், ஜார்கண்ட் மாநிலத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் ஆன்மிக குருக்களுடன் சந்திப்பு என எப்போதும் போலவே தனி ரூட்டில் பயணித்து வருகிறார்.

சக்சஸ் மீட்டில் பேசிய அனைவருமே ரஜினி சார் சீக்கிரம் சென்னைக்கு வாங்க என்றே பேசினர்.அதனை போல இந்த Success உண்மையான சக்ஸஸ் என கொண்டாடியும் வருகின்றனர்…

F3E539gaQAA65EX

கோலமாவு கோகிலா படத்தில் இருந்து நெல்சன் படங்களில் பயணம் செய்து வரும் ரெட்டின் கிங்ஸ்லி தமிழ் சினிமாவில் காமெடி டிராக்கில் நடித்து மிகப்பெரிய ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். டாக்டர், பீஸ்ட் என நடித்து அசத்திய ரெட்டின் கிங்ஸ்லி ஜெயிலர் படத்தில் திவ்யா எனும் கேரக்டரில் நடித்து காமெடியில் மிரட்டி இருப்பார்.

ஜெயிலர் படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய ரெடின் கிங்ஸ்லி, கடந்த ஒரு வாரமாக குலாப்ஜாமுன் ஜீராவை எடுத்து காதுல ஊத்தின மாதிரி இருக்கு எங்க பார்த்தாலும் 100 கோடி,100 கோடின்னு தினமும் சொல்லிட்டே இருக்காங்க எப்படியும் ஒரு 1000 கோடியை கலெக்ட் பண்ணி கொடுத்துருவலன்னு இயக்குநர் நெல்சனை பார்த்து சிரித்துக் கொண்டே ரெடின் கிங்ஸ்லி கேட்க ஆளை விடுப்பா சாமி என பெரிய கும்பிடாக போட்டு விட்டார் இயக்குநர் நெல்சன்..இந்த சம்பவம் வைரல் ஆகி வருகிறது…

From Around the web