பழி தீர்க்காமல் விடாது...அந்த செயின் வெளியே வந்துருச்சு...வெளியான டிமாண்டி காலனி 2 டிரைலர்..!
Jul 25, 2024, 07:05 IST
டிமான்டி காலனி 2 படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 15 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் இரண்டு நிமிடங்களுக்கு மேலான ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதல் பாகத்தை விட பல மடங்கு த்ரில் காட்சிகள், கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கும் இந்த படத்தின் டிரைலரே மிரட்டலாக உள்ளது என்பதும் குறிப்பாக பின்னணி இசையில் சாம் சிஎஸ் மிரட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முழுக்க முழுக்க திரில் மற்றும் சஸ்பென்ஸ் காட்சிகள் அடங்கி உள்ள இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண்பாண்டியன் உட்பட பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இரண்டாம் பாகத்தையும் இயக்கி உள்ள நிலையில் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.