விரைவில் வெளியாகிறது ரியோவின் 'ஸ்வீட் ஹார்ட்'.. எந்த ஒடிடி-யில் தெரியுமா ?

கொரோனாவிற்கு பின்பாக ஓடிடி நிறுவனங்கள் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளன. தற்போதைய காலக்கட்டத்தில் திரையரங்குகளில் ரிலீசாவதற்கு முன்பாக படங்கள் ஓடிடிக்கு விற்கப்படுகின்றன. டிஜிட்டல் உரிமம் விற்கப்பட்ட பிறகே திரையரங்கில் படங்கள் வெளியீடு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு படங்களும் தியேட்டரில் ரிலீசான ஒரு மாதங்களுக்கு பின்பாக ஓடிடியில் ரிலீஸ் ஆகின்றன.
அந்த வகையில் தற்போது 'ஸ்வீட் ஹார்ட்' ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. கடந்த மார்ச் 14 ஆம் தேதி ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெடின் கிங்ஸ்லி, ரெஞ்சி பணிக்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படத்தின் மூலமாக ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்குனராக அறிமுகமானார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
இன்றைய கால காதல் குறித்து படத்தில் பேசப்பட்டு இருந்தது. காதலர்களின் உணர்வு, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் இந்த படத்தில் கூறப்பட்டிருந்தது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது 'ஸ்வீட் ஹார்ட்'. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி இப்படம் நாளை ஏப்ரல் 11 ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது 'ஹாட் ஸ்டார்'. இந்த வாரம் ஓடிடி ரிலீசாக ரசிகர்களை கொண்டாட வைக்க இப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.