மீண்டும் ஃபெப்சி தலைவரானார் ஆர்.கே. செல்வமணி..!!

தமிழ்நாட்டிலுள்ள தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக மீண்டும் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
rk selvamani

தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட தொழிலாளர்களுக்கான சங்கம் தான் ஃபெப்சி என்கிற தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம். இதில் மற்ற மொழிகளைச் சேர்ந்த திரைப்பட தொழிலாளர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். அதனால் பொதுவாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற பெயரில் குறிப்பிடப்படுகிறது.

இந்த சம்ளேனத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இதையடுத்து வரும் 23-ம் தேதி சென்னை வடபழனியில் இயங்கும் சங்கத்தில், புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு யாரும் மனுக்களை தாக்கல் செய்யவில்லை.

அதனால் தற்போது தலைவராக இருக்கும்
ஆர். கே. செல்வமணி, மீண்டும் ஃபெப்சியில் தலைவராக அறிவிக்கப்பட்டார்.  அதேபோன்று பொதுச் செயலாளராக சுவாமிநாதன், பொருளாளராக செந்தில்குமார் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் ஆர்.கே. செல்வமணி அணியைச் சேர்ந்தவர்களாவர். 

மற்ற நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 23-ம் தேதி. நடைபெறுகிறது. வடபழனியில் உள்ள ஃபெப்சி அலுவலகத்தில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. மீண்டும் ஃபெப்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள இயக்குநர் ஆர்.கே. செல்வமணிக்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
 

From Around the web