ஒப்பந்தம் தன்னிடம் இருப்பதாகவும் கூறிய ஆர்கே சுரேஷ் திடீரென பல்டி..! 

 
1

 ’தென் மாவட்டம்’ என்ற திரைப்படத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பதாக போஸ்டர் வெளியிட்டிருந்தார் ஆர்கே சுரேஷ். 
இந்த போஸ்டரை பார்த்தவுடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது சமூக வலைதளத்தில் இந்த படத்திற்கு தான் இசையமைக்கவில்லை என்றும் இந்த படத்திற்கு இசையமைக்க என்னை யாரும் அணுகவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலடியாக ஆர்கே சுரேஷ், யுவன் சங்கர் ராஜாவிடம் ’நீங்கள் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளீர்கள், ஒப்பந்தத்தை சரி பாருங்கள் என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் திரை உலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்திய நிலையில் சற்று முன் தனது சமூக வலைதளத்தில் ’தென் மாவட்டம்’ படத்திற்கு புதிய இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக ஆர்கே சுரேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவை அவர் யுவன் சங்கர் ராஜாவின் ஐடிக்கு டேக் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1

யுவன் சங்கர் ராஜாவை ’தென் மாவட்டம்’ படத்திற்கு ஒப்பந்தம் செய்ததாகவும் அந்த ஒப்பந்தம் தன்னிடம் இருப்பதாகவும் கூறிய ஆர்கே சுரேஷ் திடீரென பல்டி அடித்து வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்யப் போவதாக கூறியிருப்பது ஏன் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.


 

From Around the web