வலிமை பட அப்டேட்டை வெளியிட்டு வைரல் செய்த ஆர்.கே. சுரேஷ்..!
 

 
ஆர்.கே. சுரேஷ் மற்றும் அஜித்

நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை படம் குறித்த நடிகர் ஆர்.கே. சுரேஷ் வெளியிட்டுள்ள புதிய அப்டேட் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் தயாராகி வரும் இந்த படம் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தயாரிப்பில் இருந்து வருகிறது. மீதம் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெறவிருந்த நிலையில் இரண்டாவது கொரோனா அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதனால் வலிமை படத்தின் மீதமுள்ள காட்சிகளை படமாக்க படகுழுவால் முடியவில்லை. மேலும் வலிமை படம் குறித்து எந்தவொரு அப்டேட்டும் வராததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கொரோனா சூழலை காரணம் காட்டி வலிமை பட போஸ்டர் வெளியீட்டையும் படக்குழு தள்ளிவைத்துவிட்டது.

இந்நிலையில் நடிகர் ஆர்.கே. சுரேஷ் வலிமை படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் அஜித் இந்த படத்துக்காக சில அவுட் ஸ்டாண்டிங் ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளதாகவும், அவருடைய திரைவாழ்க்கையில் வலிமை ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இது அஜித் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் படக்குழு வெளிநாட்டுக்கு செல்லவுள்ளது. அங்கு 10 நாட்கள் ஷூட்டிங் நடத்தப்பட்டால், வலிமை படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்துவிடும். அதை தொடர்ந்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

From Around the web