சாலைகள் நடிகை கத்ரீனா கைப் கன்னங்கள் போன்று இருக்க வேண்டும்.. அமைச்சரின் சர்ச்சை பேச்சு..!!

 
1

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. மாநிலத்தின் முதல்வராக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். உதய்பூர்வதி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திர குடா.கடந்த வாரம் முதல்வர் அசோக் கெலாட் தனது அமைச்சரவையில் மாற்றம் செய்தார். அப்போது ராஜேந்திர குடா அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரான பிறகு தனது தொகுதிக்கு முதல் முறையாக சென்ற ராஜேந்திர குடா பாவோன்க் கிராமத்தில் ​​கூடியிருந்த உள்ளூர் மக்களிடம் உரையாடினார். அப்போது அங்கு இருந்த மக்கள் அவரிடம் தரமான சாலைகள் அமைத்து தர கூறி கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு அவர், அங்கு இருந்த பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளரை சுட்டிக்காட்டி ‘எனது தொகுதியின் சாலைகள் நடிகை கத்ரீனா கைப் கன்னங்கள் போன்று இருக்க வேண்டும்’ என கேலியாக தெரிவித்துள்ளார்.

பாலிவுட் உலகின் முன்னணி நடிகை கத்ரீனா கைப் கன்னம் குறித்து ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர குடா பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

From Around the web