மீண்டும் இணைந்த ராபர்ட் - வனிதா விஜயகுமார்..!
வனிதா விஜயகுமார் தனது திருமணத்தில் பல சர்ச்சைகளை சந்தித்தவர். முதல் திருமணம் நடிகர் ஆகாஷ் என்பவருடன் நடந்தது. பின்னர், ராஜன் என்பவரைத் திருமணம் செய்தார். இரண்டு திருமணங்களும் விவாகரத்தில் முடிந்தது. நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டருடன் இவருக்கு காதல் இருந்தது என்றாலும் அது கைகூடவில்லை. பின்னர் பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்து அதில் இருந்தும் பிரிந்தார் வனிதா.
இப்படி திருமணத்திற்கும் வனிதாவிற்கும் ஏழாம் பொருத்தம்தான். இந்த நிலையில், தனது முன்னாள் காதலருடன் கடற்கரையில் ப்ரபோஸ் செய்யும்படியான புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார் வனிதா. ராபர்ட்டுடன் காதல் பிரேக் அப் இருந்தாலும் தொடர்ந்து நல்ல நட்பிலேயே இருந்தார் வனிதா. இவரது சிபாரிசில்தான் ராபர்ட் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு சீசனிலும் போட்டியாளராகக் கலந்து கொண்டார். இந்த நிலையில், ராபர்ட் மாஸ்டருடன் இப்படியான புகைப்படம் வனிதா பகிர்ந்திருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.
#SaveTheDate - Oct 05th 2024
— Nikil Murukan (@onlynikil) October 1, 2024
Details Soon..@vanithavijayku1 #Robert @onlynikil pic.twitter.com/6PRVRl7Qrn
#SaveTheDate - Oct 05th 2024
— Nikil Murukan (@onlynikil) October 1, 2024
Details Soon..@vanithavijayku1 #Robert @onlynikil pic.twitter.com/6PRVRl7Qrn
அந்தப் புகைப்படத்தில் ‘அக்டோபர் ஐந்தாம் தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்’ என்ற வாக்கியமும் இடம் பெற்றிருக்கிறது. இது படத்துக்கான ப்ரமோஷன்தான் என்கிறார்கள் வனிதாவுக்கு நெருக்கமானவர்கள்.