திரைப்பட விழாவில் ராய் லட்சுமியை கண்ட்ரோல் செய்த ரோபோ சங்கர்..!

 
ராய் லட்சுமி மற்றும் ரோபோ சங்கர்

சிண்ட்ரெல்லா திரைப்படத்தின் அறிமுக விழாவில் நடிகை ராய் லட்சுமியை ரோபோ சங்கர் கண்ட்ரோல் செய்வது போல நடந்துகொண்டது கோலிவுட்டில் பேசுபொருளாகியுள்ளது.

வினோ என்பவர் இயக்கத்தில் ராய் லட்சுமி, ரோபோ சங்கர், சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிண்ட்ரெல்லா’. இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.

இதில் படக்குழு அனைவரும் பங்கேற்றனர். விழாவில் பேசிய ரோபோ சங்கர். இந்த படத்தில் ராய் லட்சுமியுடன் நடித்துள்ளேன். அவர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். இன்றைய நிகழ்ச்சிக்கு வந்த போது பார்ப்பதற்கு மெழுகுச் சிலை போல இருந்தார். அதனால் பக்கத்தில் வந்து உட்காந்துகொண்டேன் என்று குறிப்பிட்டது சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

அவரை தொடர்ந்து ராய் லட்சுமி பேசுவதற்கு எழுந்தார். அப்போது அவருடைய கையை பிடித்துக் கொண்ட ரோபோ சங்கர் போக வேண்டாம் என்பது போல சைகை செய்தார். இதுவும் அரங்கத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. பிறகு அவரை விடுத்து ராய் லட்சுமி மைக் முன்பு வந்தார்.

சிண்ட்ரெல்லா ஒரு திகில் படம். காஞ்சனா, அரண்மனை என என்னுடைய திகில் பட வரிசையில் இதுவும் ஒரு ஹிட் படமாக இருக்கும். மிகவும் சவாலான காட்சிகளில் இந்த படத்தில் நடித்துள்ளேன். படத்தில் ரோபோ சங்கருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி என்று கூறினார்.
 

From Around the web