இன்னும் ஒல்லியாகிவிட்ட ரோபோ சங்கர்- அதிர்ச்சி தரும் புகைப்படங்கள்..!!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை இன்னும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 
 
robo shankar

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் ‘ரோபோ’ சங்கர். கடந்த 2021-ம் ஆண்டு இவர் நடித்த யுத்தச் சத்தம், இரவின் நிழல், தி லெஜண்டு, கோப்ரா போன்ற படங்கள் 2022-ம் ஆண்டு வெளியாகின. அதே ஆண்டில் நடித்த கோடை என்கிற படம் நடப்பாண்டில் வெளியானது.

ஆனால் 2021-ம் ஆண்டுக்கு பிறகு ரோபோ சங்கர் வேறு எந்த படங்களிலும் புதியதாக கமிட்டாகவில்லை. இந்நிலையில் ஒரு மாத காலத்துக்கு முன்பு ரோபோ சங்கரின் புகைப்படங்கள் வெளியாகி, சமூகவலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

மிகவும் கட்டுமஸ்தான் உடலமைப்பைக் கொண்ட ரோபா சங்கர், அந்த புகைப்படங்களில் மிகவும் உடல் மெலிந்து சோர்வாக காணப்பட்டார். அதை பார்த்த ரசிகர்கள் பலர், ரோபோ சங்கருக்கு  என்ன தான் ஆச்சு? அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளதா? என்று பல்வேறு கேள்விகளை கமெண்டுகளில் பதிவு செய்தனர்.

அதற்கு பதிலளித்துப் பேசிய ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கர்,  அவர் படத்துக்கு வேண்டி புதிய தோற்றத்துக்கு தயாராகியுள்ளதாக கூறினார். ஆனால் கடந்த வாரம் ஊடகங்களிடம் பேசிய நடிகர் போஸ் வெங்கட், ரோபோ சங்கர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறினார்.

அவருடைய உடல்நலன் பாதிப்புக்கு சில உடல்நிலைப் பிரச்னைகள் தான் காரணம். அதற்குரிய பல்வேறு சிகிச்சைகளை அவர் மேற்கொண்டு வருகிறார் என்று அவர் கூறினார். இந்நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய புகைப்படத்தை ரோபோ சங்கரின் மகன் இந்திரஜா சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த படத்தில் ரோபோ சங்கர் இன்னும் உடல் மெலிந்து காணப்படுகிறார். அவருடைய மகள் இந்திரஜா தமிழ்ப் புத்தாண்டுக்கு வாழ்த்து கூறி, புகைப்படங்களை பதிவு செய்திருந்தார். அதில் காணப்படும் ரோபோ ஷங்கர் மிகவும் மெலிந்து உள்ளார்.

ஏற்கனவே இருந்ததை விடவும் அவருடைய உடல் எடை குறைந்திருப்பதாக பலரும் கமெண்டு செய்துள்ளனர். அவருடைய முகமும் ரொம்பவும் சோர்ந்து போயுள்ளது. இதனால் பலரும் அவருடைய உடல்நலனை குறித்து அறிவதற்கு, மகள் இந்திரஜாவை டேக் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 

From Around the web