சென்னை வெள்ளத்தில் சிக்கி ரோபோ ஷங்கர் காயம்.!

 
1

விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரோபோ சங்கர். மேலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென இடத்தை நிலைநாட்டியுள்ளார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு படிப்படியாக முன்னேறி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் ரோபோ சங்கர். முதன்முதலில் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சமீபத்தில் வெளிநாட்டு கிளிகளை அனுமதியின்றி வளர்த்து வந்ததாக லட்சக்கணக்கில் இவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே இவர் பெரிய அளவில் திரையில் தோன்றவில்லை என்றாலும், அவரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அப்படியே இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் ரோபோ சங்கர் சென்னை வெள்ளத்தில் சிக்கி காலில் காயம் ஏற்பட்டதாக வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், வீட்டிற்குத் தேவையான பால் மற்றும் மளிகை பொருட்களை வாங்க இன்று காலை வெளியே சென்றபோது, தகரம் ஒன்று நீரில் மிதந்துகொண்டிருந்தது. அதனை அப்புறப்படுத்தும்போது அந்த தகரம் காலை கிழித்ததில் ரத்தம் வந்து காயம் ஏற்பட்டதாக ரோபா சங்கர் தெரிவித்துள்ளார். பொதுக்கள் அனைவரும் தேவையான மளிகை ஜாமான்கள் வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அந்த வீடியோவில் அவர் அறிவுறுத்தியுள்ளார்.


 

From Around the web