நான் உடல் எடை குறைந்ததற்கு இதுதான் காரணம்- மனம் திறந்த ரோபோ சங்கர்..!!

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் தன்னுடைய உடல் மெலிந்துபோன காரணம் தொடர்பான தகவல்களை முதன்முறையாக தெரிவித்துள்ளார். 
 
robo sankar

தொலைக்காட்சி துறையில் சினிமாவிக்குள் பிரவேசித்து வெற்றிக்கொடி நாட்டியவர்களில் முக்கியமானவர் ரோபோ சங்கர். தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள அவர், பல படங்களில் முக்கியமான குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

திடீரென அவர் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றவில்லை. அப்போது தான் அவருடைய மகள் இந்திரஜா ரோபோ சங்கரின் சமீபத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்தார். அதை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

robo sankar

இதுகுறித்து கேட்டபோது, ரோபோ சங்கர் டயட்டில் இருந்து உடல் மெலிந்ததாக மனைவி பிரியங்கா கூறினார். ஆனால் ரோபோ சங்கரின் நண்பர்கள் பலர், அவருக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் தான் உடல் மெலிந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

robo sankar

இந்நிலையில் முதல்முறையாக தனது உடல்நலனுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து மனம் திறந்துள்ளார் ரோபோ சங்கர். அதன்படி உடல் எடையை குறைக்கலாம் என்று டயட்டில் இருக்க துவங்கினேன். ஆனால் நான் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டேன். அதன்காரணமாக உடல் எடை குறையத் துவங்கியது. ஆனால் நான் இறந்துபோய் விட்டதாகவும், வேறொரு நோயால் பாதிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறி பொய்யான செய்திகள் வெளியாகின. இது என்னை மிகவும் சங்கடப்படுத்தியது என்று ரோபோ சங்கர் கவலையுடம் பேசியுள்ளார்.
 

From Around the web