ரோபோ சங்கர் மகள் திருமணத்தில் மாலை பரிமாறும் ஒரிஜினல் ரோபோ !

 
1

ரோபோ சங்கர் மகளான இந்திராஜாவின் திருமணமானது சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. பிகில் திரைப்படத்தில் இவர் நடித்த பாண்டியம்மா கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் இந்திரஜா ஆவார். இவர்களின் ரிசப்சனும் சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

9000 பேருக்கு மேல் கலந்து கொண்டு திருவிழா போன்று நடைபெற்ற இவர்களது ரிசப்ஷனிற்கு கமல்ஹாசன் , சூரி , விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். இந்த நிலையிலேயே குறித்த நிகழ்வில் இந்திராஜாவின் கணவர் செய்த சப்ரைஸ் வைரலாகி வருகின்றது.

இந்திராஜாவின் தந்தை திருவிழாக்களில் ரோபோ போன்று நடனமாடி ரோபோ சங்கர் என பெயர் பெற்றவர் என்பதால் ரோபோ சங்கரையும் , இந்திரஜாவையும் சப்ரைஸ் செய்யும் விதமாக ஒரிஜினல் ரோபோ ஒன்றின் மூலம் மாலையை எடுத்து வர வைத்து மாலை மாற்றியது மட்டுமின்றி குறித்த ரோபோவை மண்டபத்தில் உலா வர வைத்துள்ளார். குறித்த காணொளிகள் வைரலாகி வருகின்றன.

From Around the web