ரோகினி பிளான் சக்ஸஸ்..! வெளி வரப்போகும் சத்யாவின் வீடியோ..!

 
1

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலை பார்க்க ரசிகர் பட்டாளமே உள்ளது.  நேற்றைய எபிசோடில் ரவி ஸ்ருதியை வீட்டுக்கு கூட்டி வருகின்றார். இதன் போது விஜயா தனக்கு மரியாதை இல்லாமல் வீட்டை விட்டு போனதாக சொல்லி ஸ்ருதிக்கு திட்டியதோடு, ரவிக்கும் உனக்கும்  பிரச்சனை என்றால் என்னிடம் சொல்லி இருக்க வேண்டும் நான் தீர்த்து வைத்திருப்பேன் என்று சொல்ல, நீங்க என்ன ஹை கோர்ட் ஜட்ஜா என்று விஜயாவுக்கு பல்பு கொடுக்கின்றார் ஸ்ருதி.

அதன் பின்பு அண்ணாமலை நீங்க கோவிச்சுட்டு போனா உங்க வீட்ல என்ன நினைப்பாங்க என்று கேட்க, இதுவும் எனது குடும்பம் தான் நான் இதை விட்டுக் கொடுப்பேனா என்று சொல்லி எல்லாரையும் ஆஃப் பண்ணுகின்றார். அதன் பின்பு விஜயா ரவியை அழைத்து ஏன் ஸ்ருதியை கூட்டி வந்தா? அவளா வரட்டும் என்று தானே சொன்னேன் என பேச, ரவி மீனா அட்வைஸ் பண்ண விஷயத்தை சொல்லுகின்றார்.

இதனால் விஜயா நேரே மீனாவிடம் சென்று திட்டுகின்றார். அதன் பின்பு இரவு மீனா பால் காய்ச்சிக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த ரோகினி மொட்டை மாடியில் துணி காய போட்டிங்களா மழை வரப்போகுது என்று சொல்லி அனுப்பி வைத்துவிட்டு மயக்க மருந்தை பாலுக்குள் கலக்கின்றார். அதன் பின்பு இருவரும் பாலை குடித்துவிட்டு தூங்க.. ரோகினி கதவின் ஓரம் நின்று பார்த்துக் கொண்டுள்ளார். இது தான் நேற்றைய எபிசோட்.

From Around the web