கணவர் அருணின் புகைப்படத்தை வெளியிட்ட சிறகடிக்க ஆசை ரோகினி..!
Updated: Jan 28, 2024, 23:51 IST
ஜீ தமிழ் அமுதாவும் அன்னலட்சுமியும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த சல்மா அருணுக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்துள்ளது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ரோகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சல்மா அருண்.
இந்த நிலையில் தற்போது இவருடைய நிஜ கணவர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சல்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் அருணின் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.பத்து வருட காதல் கணவர் எனவும் தெரிவித்துள்ளார்.