பாய் பிரெண்டிடம் பேசுகிறாள் ரோகிணி... மனோஜுக்கு வந்த அடுத்த ஷாக்..!

 
1

இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் நாடகத்தில் சீதாவை பெண் கேட்பதற்காக அருணின் அம்மா வந்து இருக்கிறார். அப்போது மீனாவின் அம்மா சந்திரா, எங்களோட மாப்பிள்ளை விருப்பத்தை மீறி எதுவும் பண்ண முடியாது என சொல்கிறாள். அப்போது மீனா பொறுமையா இரும்மா. ரெண்டு பேருக்கும் இடைல ஒரு புரிதல் இல்லாமல் இருந்து இருக்கு என சொல்கிறாள்.

அப்போது அருணின் அம்மாவும் உங்க மாப்பிளையால தான் ரெண்டு தடவை என் பையன் சஸ்பென்ட் ஆனான். வீட்ல இருக்கிற மாதிரிதான் வெளியவும் இருப்பாங்கன்னு இல்லைல என சொல்கிறாள். அதற்கு சந்திரா என் புருஷன் இறந்ததுல இருந்து என் மாப்பிள்ளை தான் இந்த குடும்பத்துக்கு எல்லாமே. அவர் சீதாவுக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாட்டாரு. எப்பயும் எங்க குடும்பத்துக்கு நல்லது தான் செய்வாரு. இனிமே இந்த விஷயமா நீங்க எதுவும் பேச வேண்டாம் என சொல்லி அனுப்பி வைக்கிறாள்.

இதனால் அப்செட்டாகி வரும் அம்மா, அருணிடம் இந்த கல்யாணம் நடக்காதுடா. அவுங்களோட மாப்பிள்ளை சம்மதம் இல்லாம எதுவும் நடக்காதுன்னு சொல்றாங்க என்கிறாள்

இதனையடுத்து முத்துவை பார்ப்பதற்காக கார் செட்டுக்கு வருகிறாள் சீதா. அருணும் உங்களை மாதிரி நல்லவர் தான் மாமா என சொல்கிறாள். முத்து டென்ஷனாகி, நீ என்னை கெட்டவன் கூட சொல்லு. ஆனால் அவனோட கம்பேர் பண்ணி பேசாத. அவன் வஞ்சம் வைச்சு பழி தீர்க்கிறவன். அவனை கல்யாணம் பண்ணா உன் வாழ்க்கை நல்லாவே இருக்காது என சொல்கிறான் முத்து. ஆனால் சீதா கேட்காமல் இன்னைக்கு அருண் அம்மா நம்ம வீட்டுக்கு வந்து இருந்தாங்க. அக்காவும் வந்தாள் என சொல்கிறாள்.

இதனைக்கேட்டு ஷாக் ஆகிறான் முத்து. பூ கொடுக்க போறேன்னு பொய் சொல்லிடு அங்க போய் இருக்காளா என யோசிக்கிறான். 

இதனையடுத்து மீனா வீட்டுக்கு வர, முத்து ரெடியாக வாசலிலே நிற்கிறான். அவளிடம் எங்க போயிட்டு வர? பொய் சொல்ல ஆரம்பிச்சுட்ட என கேட்கிறான். அதற்கு மீனா இந்த விஷயத்துல எடுத்தோம். கவுத்தோம்ன்னு முடிவு பண்ண முடியாதுங்க. அந்த அருண் என்னை பார்த்து பேசுனாரு என சொல்கிறாள். அதற்கு முத்து, உன் அம்மா என்மேல மரியாதையும் நம்பிக்கையும் வைச்சு இருக்காங்க. நான் சீதாவுக்கு வேற நல்ல மாப்பிள்ளை பார்ப்பேன்.

அந்த அருணோட கல்யாணம் நடக்குறது எல்லாம் கனவுலயும் நடக்காத விஷயம். மீறி நடந்தால் உன்னையும் போக விட மாட்டேன். அதுக்கு மேல நீ போகணும்னா, நான் உனக்கு வேணுமா, வேணாமான்னு முடிவு பண்ணிக்கோ என சொல்லிவிட்டு போகிறான். இதனால் மீனா என்ன செய்வது என புரியாமல் குழம்புகிறாள். இந்தப்பக்கம் மனோஜை வழிக்கு கொண்டு வருவதற்காக போனில் தனது பாய் பிரெண்டிடம் பேசுவதை போல் நடிக்கிறாள் ரோகிணி. இதனால் மனோஜ் ஷாக் ஆகிறான். இப்படியாக இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் நிறைவடைந்துள்ளது.

From Around the web