ரோஜா சீரியல் நாயகியின் அடுத்த அவதாரம்..!! 

 
1

தெலுங்கில் பிரபலமான சீரியல் நடிகையாக இருப்பவர் பிரியங்கா நல்காரி. தமிழில் சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘ரோஜா’ சீரியல் மூலம் அறிமுகமானார். தனது முதல் சீரியலிலேயே ரசிகர்களின் அன்பை பெற்றார். அதற்கு காரணம் அப்பாவி தனமாக இவர் பேசும் விதம், நடிப்பு, சற்று பப்ளியாக இருக்கும் இவரது  தோற்றம் ஆகியவை தான். 

சன் டிவியில் சூப்பர் ஹிட் சீரியலான ஒளிப்பரப்பாகி வந்த ‘ரோஜா’ சீரியல் கடந்த ஆண்டு நிறைவுபெற்றது. இதனால் சீரியலிருந்து பிரியங்கா நல்காரி விடைப்பெற்றார். பிரியங்கா நல்காரியை பார்க்காமல் ரசிகர்கள் சோர்வடைந்தனர். அதனால் அவர் அடுத்து எப்போது சின்னத்திரையில் தோன்றுவார் என்று அனைவரும் ஆர்முடன் காத்திருந்தனர். 

இந்த நிலையில் ரோஜா தொடர் மூலமாக ரசிகர்களுடன் பேராதரவு பெற்ற நடிகை பிரியங்கா நல்காரி ஜீ தமிழில் ‘சீதா ராமன்’ தொடரில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அந்த தொடருக்கான புரோமோ வெளியாகியுள்ளது. அதில் திருமண கோலத்தில் கையில் மாலை மற்றும் பெட்டியுடன், கொட்டும் மழையில் ஒரு வீட்டின் முன் நிற்கிறார். பழைய ரோஜா சீரியல் நடிகை தோற்றம் போன்று இல்லாமல் பெரிய மூக்குகண்ணாடி அணிந்துள்ளார்.

From Around the web