சினிமாவில் கால்பதிக்கும் ரோஜா மகள்- ஆர்.கே. செல்வமணி விளக்கம்..!!

ரோஜா - செல்வமணியின் மகள் சினிமாவுக்கு வரவுள்ளதாக வெளியான செய்தி குறித்து அவருடைய தரப்பில்  விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
 
roja

நடிகையும், ஆந்திர பிரதேசத்தின் அமைச்சருமான ரோஜாவின் மகள் அன்சுமாலிகா சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியானது குறித்து இயக்குநர் ஆர்.கே. செல்வமணி விளக்கம் அளித்துள்ளார்.

செம்பருத்தி படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் ரோஜா. அந்த படத்தை இயக்கியவர் ஆர்.கே. செல்வமணி. தொடர்ந்து தமிழ், உள்ளிட்ட தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். ஒருபக்கத்தில் ஆர்.கே. செல்வமணியும் பிரபலமான இயக்குநராக மாறினார்.

கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து, தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய ஆர்.கே. செல்வமணியை 2002-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அன்சுமாலிகா மற்றும் கிருஷ்ணா லோஹித் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவருமே ஊடகங்களுக்கு பரிச்சயமானவர்கள் தான். அதிலும் ரோஜாவின் மகள் அம்மாவை அப்படியே உரித்து வைத்துள்ளதாக பேச்சு நிலவுகிறது.

roja family

இந்நிலையில் அன்சுமாலிகா சினிமாவில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் அவர் தெலுங்கு சினிமாவில் தயாராகும் புதிய படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக  பல்வேறு சமயங்களில் ஊடகங்கள் ஆர்.கே. செல்வமணியிடம் கேள்விகளை முன்வைத்து வந்தன.

அதற்கு தற்போது அவர் பதிலளித்துள்ளார். அதன்படி, தனது மகள் படிப்பில் சிங்கக்குட்டி. அவருக்கு கம்யூட்டர் சயின்ஸ் துறையில் பெரும் வல்லுநராக வர வேண்டும் என விரும்புகிறார். அதனால் திரைத்துறையில் வருவதற்கான வாய்ப்பு கிடையாது. தற்போது அவர் அமெரிக்காவிலுள்ள முன்னணி பல்கலைக்கழகத்தில் மென்பொருள் ஆய்வுப் பட்டயப் படிப்பை படித்து வருகிறார் என்று விளக்கம் அளித்துள்ளார்.

இதன்மூலம் ரோஜா மகள் அன்சுமாலிகா சினிமாவில் நடிக்கவுள்ளதாக வெளியான வதந்ததிக்கு முற்றுப்புள்ளி வைக்கபப்ட்டுள்ளது. தெலுங்கு சினிமாவை பொறுத்த வரை வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் பெருமளவில் உள்ளது. அங்கு எந்த நடிகருடைய குழந்தைகளைப் பார்த்தாலும், அவர்களை நடிகராகவே பார்க்கும் மனநிலை ரசிகர்களிடம் நிலவுகிறது. அதன்காரணமாக ரோஜாவின் மகளும் சினிமாவுக்கு வரவுள்ளதாக வதந்தி வெளிவந்துள்ளது.
 

From Around the web