காவாலா பாடலுக்கு கியூட்டாக டான்ஸ் ஆடிய ரோஜா சீரியல் நடிகை..!
Jul 20, 2023, 09:05 IST

சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் ரோஜா. இந்த சீரியலில் நாயகி ஆக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி.
இந்த சீரியல் முடிவடைந்தது தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீதாராமன் சீரியலில் நடித்து வந்த இவர் தனது காதலரை திருமணம் செய்து கொண்டு சீரியலில் இருந்து வெளியேறினார்.
கணவருடன் மலேசியாவில் இருந்து வரும் பிரியங்கா சமூக வலைதளங்களில் தொடர்ந்து போட்டோ வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெறும் காவாலா பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.