விநாயகர் கோயிலில் காதலரை கரம்பிடித்த ரோஜா சீரியல் நடிகை..!!

ரோஜா சீரியலில் நடித்து பிரபலமான நடிகை ப்ரியங்கா மலேஷியாவில் உள்ள விநாயகர் கோயிலில் எளிமையாக நடந்த திருமணத்தில் காதலரை கரம்பிடித்தார்.
 
priyanka

சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘ரோஜா’ சீரியல் மூலம் பிரலமானவர் பிரியங்கா. இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகி வரும் ‘சீதா ராமன்’ தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், தனக்கு திருமணம் நடந்துவிட்டதாக தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் எளிமையாக நடந்த தனது திருமணத்தின் புகைப்படங்களை அவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

இவர்களது திருமணம் மலேசியாவில் உள்ள விநாயகர் கோயிலில் எளிமையாக நடந்தது. பிரியங்காவின் கணவர் ராகுல், முன்னதாக சீரியல் மற்றும் படங்களில் நடித்துள்ளார். ஆனால் இப்போது அவர் நிரந்தர வேலை வேண்டி மலேசியாவுக்கு குடிப்பெயர்ந்து விட்டார். 

இதனால் பிரியங்காவும் மலேசியாவுக்கு சென்றுவிட்டார். தனக்கு ஷூட்டிங் இருக்கும் போது மட்டும், அவர் சென்னைக்கு வந்து நடித்து கொடுத்துவிட்டு, திரும்பி அங்கேயே போய்விடுகிறார். இல்லற வாழ்வில் இணைந்துள்ள பிரியங்கா மற்றும் ராகுலுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலர் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
 

From Around the web