ரோஜா சீரியலில் புதியதாக எண்ட்ரி கொடுக்கும் நடிகை..!

 
ரோஜா சீரியல்

சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜா தொலைக்காட்சி தொடரில் புதிய கதாபாத்திரம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது நிகழ்ச்சி தயாரிப்புக் குழு.

தமிழ்நாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் டி.ஆர்.பி-யில் முதல் இடத்தை பெற்றுள்ள சீரியல் ‘ரோஜா’. தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டு வரும் இந்த சீரியல் தெலுங்கிலும் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இந்த நாடகத்தில் வில்லியாக இருக்கும் அணு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஷாமிலி கர்ப்பமாக உள்ளார். இதனால் அவர் தொடர்ந்து சீரியலில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் தற்போது வரை அவரே அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது அவருடைய கதாபாத்திரத்தில் வி.ஜே. அக்‌ஷயா நடிகக்வுள்ளார். இதுதொடர்பான ப்ரோமோ வீடியோவும் வெளியாகியுள்ளது. இனிமேல் இவர் தான் அணு கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

From Around the web