பிக்பாஸ் வீட்டில் அத்துமீறும் காதல் ஜோடி..!

 
இந்தி பிக்பாஸ்

பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் இரண்டு இளம் நடிகர்கள் நெருக்கம் காட்டுவது போல அத்துமீறுவது ரசிகர்களிடையே விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.

தமிழில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக துவங்கியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக ஒளிப்பரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன.

இந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டது இந்தி மொழியில் தான். இதுவரை 14 சீசன்கள் கடந்து இந்நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. தற்போது 15-வது சீசனாக பிக்பாஸ் இந்தியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

புதிய சீசனுக்காக வெளியான ப்ரோமோ வீடியோவில் போட்டியாளர்கள் மையிஷே ஐயர், ஈஷான் சிஹெல் இருவரும் மிகவும் நெருக்கமாக நிகழ்ச்சியில் பழகி வருகின்றனர். குறிப்பிட்ட ஒரு எபிசோட்டில் அவர்கள் எல்லை மீறிவது போல நடந்துகொண்டனர்.

அவர்களுடைய ரொமேன்ஸ் இடம்பெற்ற வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது. இந்தியாவில் பலரும் பார்க்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் இப்படியெல்லாம் செய்வதா என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

From Around the web