தடுப்பூசி போட்டும் கொரோனா பிடியில் ரோஜா சீரியல் நடிகை..!

 
வி.ஜே. அக்ஷ்யா

கொரோனாவுக்கான தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகும் பிரபல சீரியல் நடிகை அக்ஷ்யாவுக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் தொடர் ரோஜா. நிறைய பார்வையாளர்கள் வட்டத்தை கொண்ட இந்த தொடரில் அனு என்கிற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அக்ஷ்யா. 

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இருந்து மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது. அதனால் மருத்துவரை சென்று பார்த்த போது கொரோனா பாசிட்டிவ் என்று தெரிந்தது.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டும் கொரோனா வருவதை தடுக்க முடியவில்லை. ஆனால் அதனுடைய பாதிப்பு மிக தீவிரமாகாமல் தற்காத்துக் கொள்ள முடிந்தது. தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம், கொரோனா எல்லா இடத்திலும் உள்ளது. நான் வெகு விரைவில் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்புவேன்.

என்று அக்‌ஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

From Around the web