24 மணிநேரத்தில் 10 மில்லியன் வியூஸை கடந்த ஆர்.ஆர்.ஆர் கிளிம்ப்ஸ்..!

 
ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியான 24 மணிநேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது புதிய சாதனையாக அமைந்துள்ளது.

பாகுபலி வரிசைப் படங்களை தொடர்ந்து, ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட், சமுத்திரகனி, அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் மிகுந்த பொருட்செலவில் தயாராகியுள்ளது.

வரும் 2022-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 7ம் தேதி ஆர்.ஆர்.ஆர். படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று இந்த படத்தின் 1.50 நிமிடம் ஓடக்கூடிய கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டன.

படத்தின் உருவாக்கத்தை சில நொடிகளில் காட்டும் இந்த கிளிம்ப்ஸ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. வெளியான 24 மணிநேரத்தில் இந்த கிளிம்ப்ஸ் சுமார் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வரும் வாரங்களில் இந்த வீடியோ மேலும் சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From Around the web