திடீரென அப்டேட் கொடுத்து திக்குமுக்காடச் செய்த ஆர்.ஆர்.ஆர் படக்குழு..!
 

 
ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர்

பாகுபலி படங்களை தொடர்ந்து ராஜமவுலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நடிப்பில் ராஜமவுலி மிக பிரமாண்ட பொருட்செலவில் இயக்கி வரும் படம் ஆர்.ஆர்.ஆர். கதாநாயகியாக ஆலியா பட் நடித்துள்ளார். சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இந்திய சினிமாவில் பல தரப்பினர் அதிக ஆவலுடன் எதிர்பார்த்து வரும் ஒரே படமாக உள்ளது ஆர்.ஆர்.ஆர். கொரோனா இரண்டாவது அலை மட்டும் வராமல் இருந்திருந்தால், இப்படம் வரும் ஆகஸ்டு 15-ம் தேதி வெளிவந்திருக்கும்.


ஆனால் கொரோனா பிரச்னையால் அனைத்தும் தலைகீழாக மாறிப்போனது. படத்திக் இறுதிக்கட்ட பணிகள் தோய்வடைந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக ஆர்.ஆர்.ஆர் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படக்குழு திடீரென ரசிகர்களுக்கு புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. ஆர்.ஆர்.ஆர் படத்திற்கான மேக்கிங்கில் இன்னும் இரண்டு பாடல்களே பாக்கியுள்ளன. ஏற்கனவே ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளுக்கான டப்பிங்கை முடித்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 

From Around the web