ஆர்.ஆர்.ஆர் பட ரிலீஸ்- புதிய தேதியை அறிவித்தது படக்குழு..!

 
ஆர்.ஆர்.ஆர் திரைப்படம்

ராஜமவுலி இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்திற்கான புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கியுள்ள படம் ஆர்.ஆர்.ஆர். ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் தேஜா, ஆலியா பட், ஓலிவியா மோரிஸ், அஜய் தேவ்கன், சமுத்திரகனி உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆந்திராவின் சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் எழுதப்பட்ட வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 13-ம் தேதி இப்படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகின.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பல இடங்களில் திரையரங்குகள் இன்னும் முழு செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் பட ரிலீஸ் தேதி ‘தேதி குறிப்பிடாமல்’ ஒதுக்கிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் ஆர்.ஆர்.ஆர் படக்குழு பட ரிலீஸுக்கான புதிய தேதியை அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜனவரி 7-ம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தை எதிர்பார்த்து வரும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

From Around the web